80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் 103 வயதான மூதாட்டியிடம் ஒப்படைப்பு!
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று 103 வயதான அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவியே இவ்வாறு 80 ஆண்டுகளின் பின்னர் கணவரின் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
அல்பிரெட் கிங் என்ற நபர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஒன்றாரியோ லண்டனில் இருந்து ஒன்றாறியோ குயிலெப் பகுதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது கனடிய ராணுவத்தில் சேவையாற்றிய அல்பிரெட் ஐரோப்பாவில் போர் கடமைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதம் ஏதோவொரு வழியில் தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இளம் ராணுவ வரலாற்று ஆய்வு ஆர்வலர் ஒருவரின் உதவினால் 103 வயதான கர்மல் கிங் என்ற மூதாட்டிக்கு தனது கணவர் எழுதிய கடிதம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
18 வயதான பிரிங்களி பகோட் என்ற இளைஞரை இந்த கடிதத்தை மூதாட்டியிடம் ஒப்படைத்துள்ளார்.
தாம் ராணுவ வரலாற்று பொக்கிஷங்களை திரட்டி வருவதாகவும் இந்த கடிதத்தை கண்டவுடன் குறித்த பெண்ணிடம் ஒப்படைக்க முயற்சித்து அதில் வெற்றியடைந்ததாகவும் குறித்த இளைறுர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் போது எழுதப்பட்ட கடிதங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவற்றை கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது குறித்த கடிதத்தை பார்த்ததாகவும் கடிதத்தின் முகவரிக்கு அமைய உரிமையாளரை தேடி ஒப்படைக்க முடிந்தது எனவும் குறித்த இளைஞர் தெரிவிக்கின்றார்.