கனடிய அருங்காட்சியகத்தில் மாயமான 800 பொருட்கள்
கனடாவின் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 800 பொருட்கள் காணாமல் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் மேற்கொண்ட கணக்காய்வு நடவடிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொருட்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணக்காய்வாளர் நாயக அலுவலகத்தின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சரியான தகவல்கள் பேணப்படவில்லை
அருங்காட்சியகத்தில் காணப்படும் பொருட்கள் தொடர்பான சரியான தகவல்கள் பேணப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 800 பொருட்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அருங்காட்சியகத்தில் சுமார் 300 பொருட்கள் சரியான முறையில் பேணிப் பாதுகாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.