கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய பெண்ணுக்கு ஒரு லட்சம் டொலர் பரிசு
கனடவில் கணவர் நினைவாக லாட்டரி விளையாடிய டொராண்டோவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் 1 இலட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார்.
எட்டோபிகோவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண்ணான மேரி ஸாமிட், ஓ.எல்.ஜீ நிறுவனத்தின் லொத்தர் சீ்டிடன் மூலம் அதீர்ஸ்டம் வென்றுள்ளார். என் கணவர் கடந்த செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார்.
அந்த வேதனையிலிருந்து என் மனதை ஓரளவு திசைதிருப்ப இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உதவியதாகத் தெரிவித்துள்ளார்.

நேரத்தை நல்ல முறையில் செலவிட இது ஒரு வழியாக இருந்தது,” என்று அவர் கூறியுள்ளார்.
“என் கணவர் மறைந்த பிறகு, இது அவரிடமிருந்து வந்த ஆசீர்வாதம் போல உணரப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியை அவருடன் சேர்ந்து அனுபவிக்க முடியாதது மட்டும் வருத்தமாக உள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வென்ற பணத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் மேரி குறிப்பிட்டுள்ளார்.