கனடாவில் வாகன விபத்தில் சிறுமி பரிதாப மரணம்
கனடாவின் பார்க்லாண்ட்டின் ஸ்ப்ரூஸ் க்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் ஹார்ட்விக் மேனர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 9 வயது சிறுமி தனது ஸ்கேட்போர்டில் அமர்ந்திருந்தபோது, அது வீட்டின் முன்புற பாதையில் இருந்து உருண்டு சென்றுள்ளது.
அந்த ஸ்கேட்போர்ட்டை எடுக்கச் சென்ற போது வீதியில் பயணம் செய்த பிக்கப் டிரக்கால் சிறுமி மோதுண்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ட்ரக் சாரதிக்கோ வேறு எவருக்கோ காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.