கனடா வரலாற்றில் சாதனை: 90 மில்லியன் டொலர் லட்டரி பரிசை வென்ற கல்கரி அதிர்ஷ்டசாலிகள்!
கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பாரிய லட்டரி பரிசுத் தொகையான 90 மில்லியன் டாலரை ஆல்பர்ட்டா மாகாணம், கல்கரி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினர் வென்றுள்ளனர்.
'பிளே ஆல்பெர்டா' தளம் மூலம் விற்கப்பட்ட லொட்டோ மேக்ஸ் சீட்டுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
வெற்றி எண்கள்: 08, 15, 19, 23, 26, 28, 34 மற்றும் போனஸ் எண் 38.

பல வாரங்களாக யாருக்கும் கிடைக்காமல் தேங்கி நின்ற இந்தப் பரிசுத் தொகை, தற்போதைய விதிமுறை மாற்றங்களுக்குப் பிறகு 90 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இதுவே கனடா லட்டரி வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை மற்றும் ஆல்பர்ட்டாவில் கைப்பற்றப்பட்ட உச்சபட்ச சாதனையாகும்.
வெற்றியாளர்களின் தனியுரிமை மற்றும் உரிய சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அவர்களின் பெயர்கள் அடுத்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஆல்பர்ட்டா கேமிங், லிக்கர் அண்ட் கானபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் புதிய லட்டரி சாதனைக்குச் சொந்தக்காரர்களாகியுள்ள இந்த அதிர்ஷ்டக் குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.