வரி குறைந்ததால் இளைஞர்களை குடிக்க தூண்டும் நாடு!
ஜப்பானில் மதுபானம் குடிக்காதது ஒரு பிரச்சினையாகக் கருத்தப்பட்டுவருகிறது.
ஜப்பானில் இளைஞர்கள் முந்திய தலைமுறையினரைவிடக் குறைவாக மதுபானம் அருந்துவதால் அதிலிருந்து கிடைக்கும் வரி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்தப் போக்கை மாற்ற அந்நாட்டின் தேசிய வரி அமைப்பு "Sake Viva!" என்ற போட்டியை அறிமுகம் செய்துள்ளது.
மதுபானத்திற்கான தேவையை எப்படி அதிகரிப்பது என்பதே அந்தப் போட்டி.
அதன்படி 20 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட ஜப்பானியர்கள் அது தொடர்பான வர்த்தக யோசனைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டது.
மதுபான விற்பனை சரிந்ததற்க்கான காரணங்கள்
கிருமிப்பரவல் சூழலின்போது உருவான புதிய பழக்கவழக்கங்களும் மூப்படையும் மக்கள்தொகையுமே மதுபான விற்பனை சரிந்ததற்குக் காரணங்கள் என்று கூறப்படுகின்றது.
எனினும் ஆரோக்கியமற்ற பழக்கத்தை ஊக்குவிப்பது குறித்து சில குறைகூறல்கள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் போட்டியாளர்கள், அடுத்த மாத (செப்டம்பர் 2022) இறுதிவரை யோசனைகளை முன்வைக்கலாம் என தேசிய வரி அமைப்பு தெரிவித்துள்ளது.