பூனையின் மீது கொண்ட காதலினால் தம்பதியினர் செய்த செயல்
அமெரிக்காவின் வின்கான்சின் பகுதியிலுள்ள மேனோமோனி ஃபால்ஸ் என்கிற கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ஷாவ்ன் ரெட்னர் மற்றும் அவரது மனைவி ஹிலாரி சீகல் ரெட்னர்.
இவர்கள் பூனைகளை பாதுகாப்பதற்காகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகவும் தனது வீட்டையே பூனை அருங்காட்சியமாக மாற்றியமைத்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு தான் இவர்கள் அவர்களது வீட்டை பூனை அருங்காட்சியமாக மாற்றியமைத்த போது 4000 பூனை உருவங்களை பார்வைக்காக வைத்துள்ளனர்.
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டவை
இந்த ஆண்டு ஜூலையில் மேலும் 3000 தனித்துவமான பூனை உருவங்களை அவர்கள் அருங்காட்சிகத்தில் சேர்த்துள்ளனர்.
இதற்காக அவர்கள் வீட்டின் கீழ்தளத்தை முழுவதுமாக மாற்றியமைத்து சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
மேலும் அவர்களது ஸ்டோரேஜில் சுமார் 5000 சேகரிப்புகள் உள்ளன, அதோடு அவர்களிடம் எட்டு உயிருள்ள பூனைகளும் உள்ளது.
பூனை அருங்காட்சியம் தான் எங்கள் வாழ்க்கை என்று ஷான் ரெட்னர் ( Shawn Redner) கூறியுள்ளார். அவரது மனைவி ஹிலாரி (Hillary) "பூனைகள் மிகவும் அன்பானவர்கள், இனிமையானவர்கள் என்றும் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் பூனை உருவங்கள் பெரும்பாலும் பலரால் நன்கொடை அளிக்கப்பட்டது மற்றும் செகண்ட் ஹேண்ட் கடைகளில் வாங்கப்பட்டவைகளாகும். இங்குள்ள பூனை உருவங்கள் வெறும் உருவங்கள் அல்ல இது பலரது வாழ்க்கையின் பிரதிபலிப்பு" என்று ரெட்னர் கூறுயுள்ளார்.
அத்தோடு "ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று மக்களின் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது, இங்கு சென்று சுற்றி பார்ப்பதற்கு முன்பதிவு எதுவும் செய்ய தேவையில்லை.
இதனை ஒரு காபி ஷாப் ஆக மாற்ற வேண்டும் என்று ரெட்னர் விரும்புகிறார், இங்கு காபி அருந்த வருபவர்கள் அவர்கள் பூனைகளை அழைத்து வரலாம், இப்படி நடந்தால் இதுவொரு தனித்துவமான காபி ஷாப் ஆக இருக்கும்.
இங்கு வந்தால் பூனையினால் அலர்ஜி ஏற்படும் என்று கவலைப்படுபவர்கள் பயப்பட வேண்டாம், நாங்கள் இந்த இடத்தை சுத்தமாக பராமரிக்கிறோம்" என்று ஹிலாரி கூறியுள்ளார்.
மேலும் பார்வையாளர்களிடம் வசூலிக்கும் பணத்தை இந்த தம்பதி அங்குள்ள தங்கும் விடுதிகளுக்கு தானமாக கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது.