உலகக் கிண்ணப் போட்டியில் பிரபலமான ரசிகர்! ஏன் தெரியுமா?
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆட்டத்துக்குப் பின் விளையாட்டு அரங்கைச் சுத்தம் செய்த ஜப்பானிய ரசிகர்கள் அண்மையில் பாராட்டப்பட்டனர். இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு ரசிகர் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புதன்கிழமை (23 நவம்பர்) ஜெர்மனிக்கு எதிரான ஜப்பான் அணியின் தொடக்க ஆட்டத்தில் எடுக்கப்பட்ட படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.
'அன்புடைய என் முதலாளிக்கு, என்னுடைய இரண்டு வார விடுப்புக்கு நன்றி!!!' என்று குறிப்பிடப்பட்ட பதாதையை ஜப்பானிய ஆடவர் ஒருவர் வைத்திருக்கிறார்.
FIFA World Cup Twitter கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படம் 24,000 முறை பகிரப்பட்டுள்ளது. அதேசமயம் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் NTT East எனும் ஜப்பானிய நிறுவனம் 'விடுப்பையும் உலகக் கிண்ணத்தையும் நன்றாக அனுபவியுங்கள். அன்புடன் உங்கள் முதலாளி'. என Twitter-இல் பதிவிட்டது:
அதேவேளை உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜப்பான் அதன் தொடக்க ஆட்டத்தில் 2க்கு 1 எனும் கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.