கனேடிய தீவொன்றை நெருங்கும் இராட்சத பனிப்பாறை: வெளியாகியுள்ள வீடியோ
கனேடிய தீவொன்றை இராட்சத பனிப்பாறை ஒன்று நெருங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பிலாழ்த்தியுள்ளன.
கனடாவின் Newfoundland பகுதியை நோக்கி அந்த இராட்சத பனிப்பாறை நகர்ந்துவருகிறது. அந்த பகுதியில் அடிக்கடி பனிப்பாறைகள் மிதந்துவருவதுண்டாம்.
?? A giant iceberg has sailed to the Canadian island of Newfoundland pic.twitter.com/lPJ0xSCvDO
— Sprinter (@Sprinter99800) August 1, 2023
குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால், இந்த பகுதியில்தான், 1912ஆம் ஆண்டு பனிப்பாறை ஒன்றில் மோதி டைட்டானிக் கப்பல் மூழ்கியதாம்.
இந்நிலையில், Newfoundland பகுதியை நோக்கி இராட்சத பனிப்பாறை ஒன்று நகர்ந்துவரும் காட்சிகள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன.
SpriterTeam என்னும் பெயரில் ட்விட்டரில் செய்திகள் பகிரும் ஒருவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |