பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்கள் குறித்து வெளியான பட்டியல்!
பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ளூர் பத்திரிகை ஒன்று முன்னெடுத்த ஆய்வின் அடிப்படையில், வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் குற்றச்செயல்களின் தற்போதைய தலைநகரமாக கிளீவ்லேண்ட் விளங்குகிறது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கே, 1,000 மக்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது.
அதாவது 1,000 மக்களுக்கு 139.6 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது. இதில் 35.8 மிகக் கொடூரமாக குற்றச்செயல்கள் என தெரியவந்துள்ளது. மேலும், நாட்டின் வடகிழக்கு பகுதியானது அருகாமையில் அமைந்துள்ள நார்த் யார்க்ஷயரை விட இரண்டு மடங்கு குற்ற விகிதத்தை கொண்டுள்ளது.
அது மட்டுமின்றி, லண்டனையும் கிரேட்டர் மான்செஸ்டரையும் மிஞ்சும் அளவுக்கு குற்றச்செயல்கள் பதிவாகி வருகிறது.
மதுபானம் மற்றும் கேளிக்கை விடுதிகளின் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிடுகையில், முன்னெப்போதையும் விட அதிகமான இளைஞர்கள் கத்தி போன்ற கூரான ஆயுதங்களை எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர். 2022 மே மாதம் Stockton on Tees பகுதியில் 26 வயது இளைஞர் மிகக் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டார். சமயோசிதமாக செயல்பட்டதால் குறித்த இளைஞர் காப்பாற்றப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பில் மூவர் கைதாகியுள்ளனர்.வன்முறைக்கு மட்டுமல்ல பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கிலும் கிளீவ்லேண்ட் பகுதி மிக மோசமென கூறுகின்றனர்.
அதிக குற்றச்செயல்களின் பட்டியலில் மேற்கு யார்க்ஷயர் 132.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் குற்றச்செயல்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து பகுதிகள் அனைத்தும் வட இங்கிலாந்தில் உள்ளன. பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான பகுதி என Wiltshire-ஐ குறிப்பிடுகின்றனர்.
மேலும் அது மட்டுமின்றி, கார்ன்வால், டெவோன், சர்ரே மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ஆகியவையும் நாட்டின் பாதுகாப்பான பகுதிகள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. குற்றச்செயல்கள் மிகுந்து காணப்படும் லண்டன் நகரமானது அதிசயமாக, நாட்டில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான பகுதிகளின் முதல் 10 இடங்களில் கூட வரவில்லை.
இருப்பினும், வழிப்பறி மற்றும் கொள்ளைக்கு பெயர்போன இடமாக லண்டன் உள்ளது. கிரேட்டர் மான்செஸ்டரில் அதிக திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.