அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடமொன்றில் நேற்றிரவு பாரிய தீ
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடமொன்றில் நேற்றிரவு பாரிய தீ பரவியுள்ளது.
துபாய்க்கு வடக்கிலுள்ள அஜ்மன் எமிரேட்ஸின் அல் ரஷ்தியாஹ் 3 பகுதியிலுள்ள அஜ்மன் வன் கொம்பிளெக்ஸ் கட்டடத்திலேயே இந்த தீ பரவியது.
இந்நிலையில் அஜ்மான் பொலிஸாரும் சிவில் பாதுகாப்புப் படையினரும், இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்க்ள கொண்டுவந்தனர்.
فرق الدفاع المدني تتمكن من اخماد حريق شب في احد الابراج السكنية بعجمان pic.twitter.com/VjHd70ZUV4
— ajmanpoliceghq (@ajmanpoliceghq) June 26, 2023
கட்டத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அஜ்மன் சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டிலும் இக்கட்டடத் தொகுதியில் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.