காசா- இஸ்ரேல் போர் தொடர்பில் இன்று புதிய தீர்ப்பு!
காசாவில் இஸ்ரேலின் போர் தொடர்பில் சர்வதேசநீதிமன்றம் இன்று (24) புதிய தீர்ப்பினை வெளியிடவுள்ளது.
இஸ்ரேல் சர்வதேசரீதியில் இராஜதந்திரரீதியாக தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ள சூழ்நிலையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
காசா மீதான தனது நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்
இந்நிலையில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை நிறுத்தவேண்டும் என ஐசிசி உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இதேவேளை இஸ்ரேலிய பிரதமர் ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள்கள் குறித்தும் நீதிபதிகள் ஆராயவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கடந்தவாரம் இஸ்ரேல் காசா மீதான தனது நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது.
ரபா குறித்து தென்னாபிரிக்கா விசேடமாக வேண்டுகோள் விடுத்திருந்தது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளன எனினும் அவை சர்வதேசரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேசநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.