அமெரிக்காவில் ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட ஆறு வயது சிறுவன்!
அமெரிக்காவின் கிழக்கு மாகாணமான வர்ஜீனியாவில் உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறையில் ஆறு வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் நடந்த சம்பவத்தில் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆறு வயது மாணவர். அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார், என்று உள்ளூர் காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரூ செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இது தற்செயலான துப்பாக்கிச் சூடு அல்ல. பாதிக்கப்பட்ட பெண் தனது 30 வயதுடைய ஆசிரியை என்றும், அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை என நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நான் அதிர்ச்சியில் இருக்கிறேன், நான் மனமுடைந்துவிட்டேன் என்று நகரத்தின் பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்க்கர் கூறினார். சிறுவர்களுக்கு துப்பாக்கிகள் கிடைக்காததை உறுதிசெய்ய சமூகத்தின் ஆதரவு எங்களுக்குத் தேவை.
அமெரிக்காவில் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அண்மைய காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மே மாதம் டெக்சாஸின் உவால்டேயில் 18 வயது இளைஞன் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களைக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி வன்முறைக் காப்பக தரவுத்தளத்தின்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான 44,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.