இசைக் கச்சேரியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை; சிதறியோடிய மக்கள்
அமெரிக்கா ரெட் ராக்ஸ் ஆம்பிதியேட்டரில் நேற்று இடம்பெற்ற லூயிஸ் டாம்லின்சன் கச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்ததில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆலங்கட்டி மழையால் காயம் அடைந்த 7 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இசைக்கச்சேரி இடம்பெற்ற இடம் திறந்தவெளியாக இருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை திடீரென பெய்ததால் இசைக்கச்சேரியை ரசித்த ரசிகர்கள் சிதறி ஓடிய காணொளிகளும் வெளியாகியுள்ளன.
Tonight was the scariest night of my life. It started pelting people with hail at Red Rocks and my sister and I luckily found shelter under a sign. I am bleeding and have huge bumps on my head from the hail. Hoping everyone made it out safely. pic.twitter.com/jong1SBuYd
— nicole (@nikkitbfh) June 22, 2023
சமபவம் தொடர்பில் மேற்கு மெட்ரோ தீயணைப்பு மீட்புத் துறையின்படி,80 முதல் 90 பேர்” சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.