கனடாவில் 200 ஆண்டுகள் பழயைமான தேவாலய மணிக்கு நேர்ந்த கதி
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்திலிருந்து காணாமல் போன 200 ஆண்டுகள் பழமையான மணி உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மணி குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், அதன் முடிவு பக்தர்களையும் சமூகத்தினரையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ப்ரிட்ரிக்சன் நகரில் அமைந்துள்ளபுனித பீட்டர்ஸ் அங்கிலிக்கன் தேவாலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, 300 முதல் 400 பவுண்ட் எடையுள்ள வெண்கல மணி கடந்த வாரம் திருடப்பட்டது.

இந்த மணி பாதுகாப்பாக மீட்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த தேவாலய நிர்வாகத்துக்கும் பக்தர்களுக்கும், கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட மணி, அருகிலுள்ள ஒரு சாலையோர பள்ளத்தில் சுத்தியலால் உடைக்கப்பட்ட நிலையில் துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மணி முழுமையாக அல்ல, உடைக்கப்பட்ட துண்டுகளாக மட்டுமே கிடைத்துள்ளது. சுத்தியலால் நொறுக்கப்பட்டு சாலையோர பள்ளத்தில் வீசப்பட்டுள்ளது. இது உண்மையில் ஒரு மோசமான செயல் என அருட்தந்தை ரோஸ் ஹெப் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மணியின் சில பகுதிகள் மீட்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
“மீட்கப்பட்ட பகுதி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மணியின் பல துண்டுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல் உள்ளவர்கள் பொலிஸாரிடம் அறிக்குமாறு கோரப்பட்டுள்ளது.