மகளிடம் அத்துமீறல்... கணவரை கட்டி வைத்து மனைவி செய்த கொடூரம்; பொலிஸார் அதிர்ச்சி!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சிறுமியுடன் கணவன் பாலியல் உறவு
அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்த நிலையில் 15 வயதுடைய உறவுக்கார சிறுமியுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார்.
வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்ட பின்னர், அதனை கழிவறைக்குள் வீசி விட்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
மனைவி மீது கொலை முயற்சி வழக்கை பொலிஸார் பதிவு செய்து விசாரணைகளின் போது ஆணுறுப்பை கழிவறையில் எதற்காக புதைத்தீர்கள் என்று கேட்டதற்கு,
அதனை மீண்டும் ஆபரேஷன் மூலம் ஒட்ட வைத்து விட முடியும். அதற்காகவே கழிவறைக்குள் வீசினேன் என்று அந்த மனைவி பதில் அளித்துள்ளார்.
அதேவேளை ஆணுறுப்பை இழந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், . அவரது நிலைமை குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.