பிரான்ஸில் தீயில் கருகிய பெண்ணும் 7 பிள்ளைகளும்!
பிரான்ஸில் வீடொன்றில் தீயினால் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.52 மணியளவில் இச்சம்பவம் குறித்த தீயணைப்புப் படையினருக்கு அயலவர்களால் அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த பிள்ளைகளில் நால்வர், அப்பெண்ணின் முதல் திருமணம் மூலம் பிறந்தவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறார்கள் 2 முதல் 14 வயதானவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவர் தீயினால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.