6 மணி நேரமே தாக்குப்பிடிப்பார்; அமெரிக்க அதிபர் பைடன் உடல்நிலை குறித்து பகீர் தகவல்!
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் , தற்போதையை ஜாதிபதியான ஜோ பைடனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அதாவது 6 மணி நேரம் மட்டுமே நன்றாக வேலை செய்ய முடிவதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடனும் , குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
6 மணி நேரமே தாக்குப்பிடிப்பார்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் உடல்நிலை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது அமெரிக்க அதிபர் பைடனால் காலை வேலை மட்டுமே வேலை செய்ய முடிகிறதாம். அதுவும் ஆறு மணி நேரம் மட்டுமே அவரால் வேலை செய்ய முடிகிறது என அவரது உதவியாளர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 6 மணி நேரத்தைத் தாண்டினால் அவர் அதீதமாகச் சோர்வடைந்து விடுவதாக கூறப்படும் நிலையில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போதும் அவர் சோர்வடைந்துவிடுவதாகக் கூறப்படுகிறது.
அதிபர் தேர்தலையொட்டி பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. அதில் பைடன் செயல்பாடுகள் மிக மோசமாகவே இருந்தது. அவர் அதீத சோர்வுடன் இருந்ததும் அதற்குக் காரணம்.
இதனாலேயே இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பைடன் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என பைடன் உதவியாளர்கள் கூறியுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் வேலை செய்யும் மற்றும் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் பலரும் பைடன் இதுபோல அவ்வப்போது ஃபீரீஸ் ஆகி நின்றுவிடுவார் என்றே கூறுகிறார்கள்.
அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், பைடனின் உடல்நிலை குறித்து மிகப் பெரியளவில் விவாதம் எழுந்துள்ளது. அதேவேளை பைடன் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் அவர் 4 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
அதன்படி பார்த்தால் அவர் 86ஆவது வயது வரை அதிபராக இருப்பார். இப்போதே பைடன் உடல்நிலை மற்றும் மனநலன் இப்போது இப்படி இருக்கும் போது பைடனால் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.