கல்கரி நகரில் 'Family Day'இல் நிகழ்ந்த துயரம்; குழந்தை உட்பட இருவர் பலி
கனடாவின் கல்கரி நகரில் 'Family Day' விடுமுறை வார இறுதியின் போது நிகழ்ந்த அடுத்தடுத்த விபத்துகளில் சிக்கி இரண்டு வயதுக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, கனடாவின் கல்கரி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த வீதி விபத்தில், நடைபாதையில் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.

ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியபோதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த சோக நிகழ்வு நிகழ்ந்த அடுத்த நாளான திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில், நகரின் வடமேற்கு பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற 70 வயது முதியவர் ஒருவர் பார ஊர்தி மோதியதில் உயிரிழந்தார்.
இதன்படி, இந்த ஆண்டுக்குள், கல்கரி நகரில் 8 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.