கனடா நகரமொன்றில் பயங்கர விபத்து: இருவருக்கு நேர்ந்த சோகம்!
கனடா நகரமொன்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் கல்கரி southwest Macleod Trail near Lake Fraser பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 37 வயது ஆணும் அவரது ஏழு வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.
மேலும், சாரதியின் மகளான 11 வயது சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய 50 வயதுடைய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர், இருப்பினும் லேக் ஃப்ரேசர் டிரைவில் உள்ள ஃபோர்டு டீலர்ஷிப்பில் ஒரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.