முல்லைத்தீவில் யுவதிகளின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விபரீதம்
முல்லைத்தீவில் யுவதிகளின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிகள் பஸ்சொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர்.
முல்லைத்தீவு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒட்டுசுட்டானை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய யுவதிகள் காயமடைந்துள்ளனர்.
மேலதிக சிகிச்சை
குறித்த இருவரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணம் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.