ஒன்றாரியோவில் பாரிய விபத்து: இருவர் உயிரிழப்பு! ஒருவர் வைத்தியசாலையில்
ஒன்றாரியாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் வடமேற்கு ஒன்றாரியோவின் ரிச்மன்ட் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இரு பிக்அப் ரக வாகனங்கள் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விபத்து அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியமை, இருக்கைப் பட்டிகளை அணியாமை மற்றும் மதுபோதை ஆகிய காரணங்களினால் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.