தென் கொரிய ஜனாதிபதி தொடர்பில் இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு
தென் கொரிய ஜனாதிபதி மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் இன்று(14) இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி யூனை பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்துடன் அவர்மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை( 7) நடந்த முதல் வாக்கெடுப்பு யூனுக்குச் சாதமாக அமைந்தது.
இந்த நிலையில் முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஐந்து சிறிய கட்சிகளும் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை தாக்கல் செய்ததாக தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு 200 வாக்குகள் தேவை என கூறப்படுகின்றது. அதேவெளை கடந்த முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.