ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் வீரர்களுக்கு அதிரடி தடை
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் தடகள வீரர்களுக்கு தடை விதிப்பதாக உலக தடகள அமைப்பின் தலைவர் செபஸ்டியன் கோய் (Sebastian Coy) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா. அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் தொடர்ந்தது.இது உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாகியது.
இதனையடுத்து, ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்தநிலையில், உலக தடகள அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. உலக தடகள அமைப்பின் தலைவர் செபஸ்டியன் கோய் (Sebastian Coy) அறிவிப்பில், ‘உலக தடகள அமைப்பின் கீழ் நடைபெறும் அனைத்துவகையான போட்டிகளிலிலும் ரஷ்ய வீரர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து தடகள வீரர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் வரும் காலங்களில் நடைபெறவுள்ள தடகள போட்டிகளிலில் பங்கேற்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப் ஒரேகான் 22, உலக தடகள உள்விளையாட்டு சாம்பியன்ஷிப் பெல்க்ரேட் 22, உலக தடகள விரைவு நடை குழு சாம்பியன்ஷிப் மஸ்கட் 22 ஆகிய தொடர்களிலிலும் தடைவிதிக்கப்படுகிறது.