உக்ரைனில் மது விற்பனைக்கு அதிரடி தடை!
உக்ரைன் தலைநகர் கீவில் மது விற்பனைக்கு தடை விதித்து நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய படைகள் தலைநகர் கீவை குறித்து வைத்து தாக்கு நடத்தி வருகின்றன.
உக்ரைனின் ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அதனை அழிப்பதே இலக்கு என ரஷ்ய அரசு தெரிவித்தது.
ஆனால், குழந்தைகள், பொதுமக்கள் என ரஷ்ய படைகளின் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இது தவிர ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் ரஷ்ய வீரர்களும் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனை காக்க நாட்டு மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி , அவ்வாறு வருபவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.
மேலும், ராணுவ அனுபவம் கொண்டவர்கள் சிறையில் இருப்பின் அவர்களை விடுதலை செய்யவும் உக்ரைன் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் நாட்டுக்காக போராட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் மது விற்பனைக்கு தடை விதித்து அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.