நியூயார்க் ஆளுநர் பதவி விலகுமாறு அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்து
பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை (Andrew Cuomo)ராஜினாமா செய்யுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden)அறிவுறுத்தி உள்ளார்.
ஆண்ட்ரூ கியூமோ (Andrew Cuomo)தங்களை பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளாக்கியதாக அவரது அலுவலகத்தில் பணியாற்றும் 11 பெண்கள் புகார் கூறியதைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையின் முடிவில் ஆண்ட்ரூ கியூமோ(Andrew Cuomo) மீது கூறப்பட்ட புகார்கள் உண்மை என்பது தெரியவந்ததை அடுத்து அதிபர் ஜோ பைடன் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.