ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் கட்டுப்பாட்டில் அதிக சுரங்கங்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசாங்கத்தை விட தலீபான்கள் கையிருப்பில் அதிக சுரங்கங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக, உள்ளூர் கிளர்ச்சியாளர்கள், தலீபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசை விட தலிபான்களின் கட்டுப்பாட்டில் அதிக அளவிலான சுரங்கங்கள் உள்ளன என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதுபற்றி அந்நாட்டு சுரங்க மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் 748 சுரங்க பகுதிகள் உள்ளன.
இவற்றில், 283 சுரங்க பகுதிகள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. 281 சுரங்க பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. மீதமுள்ள சுரங்க பகுதிகளை உள்ளூர் தொழிலதிபர்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர் என தெரிவித்து உள்ளது.