நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் பதில் நிதியமைச்சர்
ஆப்கானிஸ்தான் பதில் நிதியமைச்சர் காலித் பயேன்தா ராஜினாமா செய்துள்ளதுடன் அவர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானின் 9 மாகாணங்களின் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பதில் நிதியமைச்சர் காலித் பயேன்தா (Khalid Payenda) ராஜினாமா செய்துள்ளார்.
சுங்க நிலையங்களை தலிபான்கள் கைப்பற்றிய பின் அரசுக்கான வருமானம் குறைந்ததையடுத்து காலித் பயேன்தா இராஜினாமா செய்துள்ளதாக ஆப்கான் நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுகவீனமடைந்த நிலையில் வெளிநாட்டிலுள்ள அவரின் மனைவியுடன் இருக்க விரும்பியமையும் அவரின் இராஜினாமாவுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் காலித் பயேன்தா (Khalid Payenda) எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.