கனடா பிரதமர் தேர்தல்: ஆப்கானிஸ்தான் பிரச்சினையால் ட்ரூடோவுக்கு பின்னடைவு?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்கூட்டியே தேர்தல் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனாவை அவர் எதிர்கொண்ட விதம் மக்களைக் கவர்ந்த நிலையில் அவர் உற்சாகமடைந்து தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட, எதிர்பாராமல் உருவான ஆப்கானிஸ்தான் பிரச்சினை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கனடா ஆப்கானிஸ்தானைக் கையாளும் விதத்தை தாங்கள் உற்றுக் கவனித்து வருவதாக 80 சதவிகித கனேடியர்கள் தெரிவித்துள்ள நிலையில், ட்ரூடோ காபூலிலிருந்து கனேடியர்களை மீட்டுக்கொண்டு வந்ததை வெகு சிலர் மட்டுமே வெற்றியாக கருதுகிறார்கள்.
மறுபக்கமோ, ஆப்கானிஸ்தான் பிரச்சினையின் தாக்கம் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை மாற்றவில்லை என 60 சதவிகிதத்தினர் கூறியுள்ள நிலையில், 20 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தான் பிரச்சினையையும் கருத்தில் கொள்வோம் என்று கூறியுள்ளார்கள்.
ஆக, மக்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று எண்ணி ட்ரூடோ முன்கூட்டியே தேர்தலை அறிவித்த நிலையில், இந்த ஆப்கானிஸ்தான் பிரச்சினையால் தேர்தல் அவருக்கு சாதகமாக அமையுமா பாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.