ஜேர்மனியில் தஞ்சமடைந்து மேற்குலக வாழ்க்கை முறைக்கு மாறிய ஆப்கான் பெண் ; குழி தோண்டி புதைத்த சகோதரர்கள்!
ஜேர்மனியில் மேற்குலக வாழ்க்கை முறைக்கு மாறிய சகோதரியை ஆப்கான் சகோதரர்கள் இருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜூலை மாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்து முழுமையான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, சயட்(26) - செயட் ( 23) என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சகோதாரர்கள் தங்கள் மூத்த சகோதரி மர்யமமை (36) பேர்லினில் கழுத்தை நெரித்து கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான தங்கள் சகோதரியின் உடலை சூட்கேஸ் ஒன்றினுள் வைத்து அவர்கள் வெளியே எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேர்ளினில் உள்ள புகையிரத நிலையத்தில் அவர்கள் கறுப்பு நிற பயணப் பொதியுடன் காணப்படுவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன. சகோதரர்கள் இருவரும் ஜேர்மனியின் பவரியாவிற்கு சகோதரியின் சடலத்துடன் சென்ற அவர்கள் சிறிய காட்டுப்பகுதியில் உள்ள ஆழமற்ற புதைகுழியில் சகோதரியின் உடலைப் புதைத்துள்ளனர்.
இந்நிலையில் சகோதரியின் மேற்கத்தைய வாழ்க்கை முறை தங்களுடைய மரியாதை ஒழுக்கம் மற்றும் பெண்களைப் பற்றிய அவர்களது தொன்மையான கருத்துக்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் அவர்கள் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் சகோதரி தனது 16 வயதில் திருமணம் செய்த நபரை -விவாகரத்து செய்து இன்னொருவரை திருமணம் செய்ததை ஏற்பதற்கு சகோதரர்கள் இருவரும் தயாராகயில்லை என ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை கொல்லப்பட்ட பெண் 2013 இல் தனது இரு பிள்ளைகளுடன் ஆப்கானிலிருந்து அகதியாக தப்பிவந்தவர் என ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாங்கள் பெண்களை உங்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக நடத்துகின்றோம்,பெண் வீட்டு வேலை- சமையல்,போன்றவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை பராமரிக்கும் வேலைக்காரி போன்றவர் என சகோதாரர்கள் இருவரும் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண் தொடர்ச்சியாக அச்சத்தின் பிடியில் வாழ்ந்ததுடன், சகோதரர்கள் அவருக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வந்ததுடன், அவர் ஏனையவர்களுடன் தொடர்புகொள்வதை தடுக்க முயன்றனர் என ஜேர்மனியின்ஊடகங்களும் மரியமை நன்கு அறிந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
மர்யம் நல்லவர் விவாகரத்தின் பின்னர் மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அவரது சகோதரர்கள் அவரை அச்சுறுத்தியதால் அவர் அச்சத்தில் வாழ்ந்தார் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நான் இஸ்லாமிய முறைப்படி தலையை மூடாததால் எனக்கும் ஏதாவது நடக்கலாம் என கொல்லப்பட்ட பெண்ணின் தொடர்மாடியில்வசிக்கும் பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.