ஆப்கானிஸ்தான் விவகாரம்...நாளைக் கூடுகிறது ஜி-7 மாநாடு
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஆலோசிக்க நாளை ஜி-7 மாநாடு கூடுகிறது .
ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஜி-7 நாடுகளின் மாநாட்டை செவ்வாய்க்கிழமை கூட்டவிருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில்,
'ஆப்கனில் சிக்கியுள்ளவா்களை பாதுகாப்பாக மீட்பது, அந்த நாட்டு மக்களுக்கு உதவுவது, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் போரில் பெற்ற அனுகூலங்களைத் தக்கவைப்பது முதலியவற்றை சா்வதேச சமுதாயம் இணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்காக, ஜி-7 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் பிரிட்டன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும்' என்றாா்.
ஜி-7 அமைப்பில் பிரிட்டனுடன் அமெரிக்கா, ஜொமனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.