நைஜீரியாவில் 2000 மோட்டார் சைக்கிள்கள் அழிப்பு காரணம் என்ன தெரியுமா?
நைஜிரியாவில் சுமார் இரண்டாயிரம் மோட்டார் சைக்கிள்களை அந்நாட்டு அதிகாரிகள் உடைத்து அழித்துள்ளனர்.
நைஜீரியாவின் பெரு நகரங்களில் ஒன்றான லாகோஸில் இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் குறித்த நகரில் டாக்ஸி சேவையில் ஈடுபடுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸி சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளனர்.
அண்மையில் 38 வயதான சண்டே டேவிட் என்ற ஒலியமைப்பாளர் ஒருவர், இந்த மோட்டார் சைக்கிள் டாக்ஸி ஒட்டுனர்களினால் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாடகை கட்டணம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் மோட்டார் சைக்கிள்களில் மக்களை போக்குவரத்து செய்யும் டாக்ஸி சேவையை நடாத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து நகர மக்கள் சாதகமாகவும் பாதகமாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்து சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறான டாக்ஸி சேவைகள் அவசியம் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த டாக்ஸி சேவையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக மற்றுமொரு தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.