அமெரிக்கா- ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம்
பல மாதங்களாக நீடித்த பதற்றத்திற்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை திறப்பு உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்சார் வர்த்தகத்திற்கு முக்கியப் புள்ளியாக இருக்கும் 'ஹோர்மூஸ் நீரிணை' மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த இருநாட்டுப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து, ஒப்பந்தத்தில் மத்தியஸ்தராகப் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கையெழுத்திட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கு மிக முக்கியமானது எனவும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்தால், இந்தியா தனது உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.