செயற்கை நுண்ணறிவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்கள் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தவறுகள் உள்ளன என்று உலகளாவிய பொது ஊடக கூட்டமைப்பொன்று வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 18 நாடுகளில் இருந்து 22 பொது ஊடக நிறுவனங்கள் —பங்கேற்றன.
பத்திரிகையாளர்கள் OpenAI-யின் சாட்ஜீபிடி ChatGPT, மைக்ராசொப்ட் கொப்லொட் Microsoft Copilot, கூகுள் ஜெமினி Google Gemini, மற்றும் பெர்பிலெக்ஸிட்டி Perplexity ஆகிய நான்கு முக்கிய சாட்பாட்களின் 3,000-க்கும் மேற்பட்ட பதில்களை மதிப்பாய்வு செய்தனர்.
அவர்களின் மதிப்பீட்டின் படி, 45% பதில்களில் குறைந்தது ஒரு முக்கியமான பிழை காணப்பட்டது. 31% பதில்களில் மூலத் தகவல் (source) குறித்த பெரிய பிரச்சினைகள் காணப்பட்டன.
20% பதில்களில் துல்லியக்குறை (accuracy issue) காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம் (European Broadcasting Union) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேடல் இயந்திரங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் AI சாட்பாட்கள், செய்தி உள்ளடக்கங்களை அடிக்கடி தவறாக விளக்குகின்றன” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, செய்தி துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த உலகளாவிய கவலைகளை மீண்டும் முன்வைத்துள்ளது.