கனடாவில் திடீர் மரணங்களை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு!
வைத்தியசாலைகளில் இடம்பெறக் கூடிய திடீர் மரணங்களை தவிர்ப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடிய ஆய்வாளர்களினால் இந்த புதிய கண்டு பிடிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த ஆய்வு முயற்சி வெளியிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் எதிர்பாராத விதமாக இடம்பெறக்கூடிய மரணங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு மரணம் ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் முன்கூட்டியே எதிர்வு கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு பொறிமுறை ஒன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கனடிய மருத்துவ ஒன்றியத்தினால் இது தொடர்பான தகவல் அந்த நிறுவனத்தின் சஞ்சிகையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஆபத்தான நோயாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு இந்த புதிய முறை பயன்படும் என டொரன்டோ மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் பல்வேறு விடயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நோயாளர்களை தொடர்ந்து கண்காணிக்க கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஊடாக நோயாளிகளின் நிலைமை பாதிக்கப்படுவதை கண்டறிந்து மருத்துவர்களுக்கு அறிவிக்கும் முறைமையாக இந்த புதிய முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.