ஆண்டுக்கு சுமார் 05 கோடி சம்பளம் ; AI துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் ஏற்படக்கூடிய பேராபத்துகளை முன்கூட்டியே கணித்துத் தடுக்க, OpenAI நிறுவனம் ஒரு புதிய உயர் பதவியை அறிவித்துள்ளது.
'Head of Preparedness' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பதவிக்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.94 கோடி அடிப்படை சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

OpenAI
இது தவிர நிறுவனத்தின் பங்குகளும் கூடுதல் சலுகையாக வழங்கப்படும். OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் இது குறித்து பகிர்கையில், "இது மிகவும் அழுத்தமான ஒரு பணி. பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே நீங்கள் ஆழமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
AI மாடல்கள் மனித அறிவாற்றலை தாண்டி செல்லும்போது, அவை சைபர் தாக்குதல்கள், உயிரியல் ஆயுத தயாரிப்பு மற்றும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலால் பேராபத்தை விளைவிக்காமல் தடுப்பதே இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும்.
தற்போது சர்வதேச அளவில் AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் இல்லை.
மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் AI-ன் அபாயங்கள் குறித்து எச்சரித்து வரும் நிலையில், OpenAI-ன் இந்த அதிரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.