பார்வையற்ற பெண்ணிடம் மன்னிப்பு கோரிய எயார் கனடா
பார்வையற்ற பெண் ஒருவரிடம் கனேடிய விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
வழிகாட்டி நாய் ஒன்றை அழைத்துக் கொண்டு விமானத்தில் பயணிப்பதற்கு இந்தப் பெண்ணுக்கு விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கவில்லை.
கனடாவின் மின்னசொட்டாவைச் சேர்ந்த 49 வயதான டென வெய்ன்ரைட் என்ற பெண் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
றொரன்டோவிலிருந்து அமெரிக்காவின் மின்னபொலிஸிற்கு பயணிக்க முயற்சித்த போது வழிகாட்டி நாயுடன் பயணம் செய்ய விமான சேவை நிறுவனம் குறித்த பெண்ணுக்கு அனுமதி வழங்கவில்லை.
கனேடிய விமான சேவை நிறுவனத்தின் இந்த நடவடிக்கையினால் குறித்த பெண் ரயில் வழியாக பயணித்து பின்னர் கார் மூலம் எல்லையை கடந்து உள்நாட்டு விமான சேவை மூலம் தனது சொந்த ஊரைச் சென்றடைந்துள்ளார்.
இதனால் தமக்கு இரண்டாயிரம் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எயார் கனடா விமான சேவை நிறுவனம் தம்மை ஓர் கைதி போன்றும், தம்மை ஓர் சித்த சுயாதீனமற்றவராகவும் நடாத்தியதாகவும் குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக அந்தப் பெண்ணிடம் எயார் கனடா விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.