ஆட்குறைப்பு மேற்கொள்ளும் எயார் கனடா
எயார் கனடா நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு முன்னணி ஊடகமொன்றுக்கு இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. எயார் கனடாவின் மொத்த ஊழியர்களில் சுமார் 1% — தொழிற்சங்கத்தில் இல்லாத முகாமைத்துவ பணியாளர்கள் எனவும் அவர்களே இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எயார் கனடா நிறுவனத்தின் பேச்சாளர் கிறிஸ்டோஃப் ஹென்னபெல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“சர்வதேச நிறுவனமாக இருக்கும் எயார் கனடா தன்னுடைய வளங்கள் மற்றும் செயல்முறைகளை அவ்வப்போது பரிசீலித்து, வணிக நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை திறம்பட ஆதரிக்கப்படுவதை உறுதி செய்கிறது,” என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவான ஆய்வுக்குப் பிறகு சில மேலாண்மை பணியிடங்களை குறைக்கும் கடினமான முடிவை எடுக்க வேண்டியதாகியுள்ளது,” என தெரிவித்துள்ளார்.