எயார் கனடா நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் விதித்த தீர்ப்பு
குடும்பம் ஒன்றை சிரமத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சுமத்தி எயார் கனடா நிறுவனத்திற்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
நோவா ஸ்கோசியாவின் நீதிமன்றம் ஒன்று இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கனடாவில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்த ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று எயார் கனடா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.
குறித்த குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளுக்காக சுமார் 4200 டாலர்களை நட்ட ஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் எயார் கனடா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஹாலிபெக்ஸை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒரு ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவிற்கு பயணித்துள்ளது.
அவர்கள் மீண்டும் கனடா திரும்பிய போது விமான சேவையை நிறுவனம் உரிய சேவையை வழங்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்தினர் பயணத்தின் போது அலைக்கழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
விமான சேவை நிறுவனத்தின் பணியாளர் பற்ற குறையினால் விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் இதனால் குறித்த குடும்பத்தினர் மாற்று வழியில் பயணிக்க வேண்டும் என பணிக்கப்பட்டதாகவும் அந்த குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஐந்து பேரை கொண்ட குடும்பத்தினர் பிரிக்கப்பட்டு இரு வேறு விமானங்களில் பயணிக்க செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசமான பயண அனுபவத்தை எயார் கனடா நிறுவனம் வழங்கியதாக குறித்த குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் தங்களது பயணப் பொதிகளை போக்குவரத்து செய்வதிலும் குடும்பத்துடன் ஒன்றாக பயணம் செய்ய முடியாமலும் போனதாக இந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்பாட்டுக்காக குறித்த குடும்பத்தினர் எயார் கனடா நிறுவனத்திடம் 20000 டாலர்கள் நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் நட்ட ஈடாக 4200 டாலர்களை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.