நடுவானில் குலுங்கிய ஏர் யூரோப்பா ; 40 பயணிகள் காயம்!
ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 787-9 ட்ரீம்லைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று விமானம் ஏற்பாடு
இதனையடுத்து அவசர நிலையை கருத்தில் கொண்டு ஏர் யூரோப்பா விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது. நேற்ற்திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை ஏர் யூரோப்பா மற்றும் உள்ளவர் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது.
விமானம் திடீரென வானில் குலுங்கிய போது அருகாமையில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்தில் வேண்டிய மருத்துவ உதவி வழங்கப்பட்டதுடன் , 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பயணிகள் மாற்று விமானம் மூலம் உருகுவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏர் யூரோப்பா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பயணிகள் சிலர் பகிர்ந்துள்ளதில் பயணி ஒருவர் தலைக்கு மேல் இருக்கும் கம்பார்ட்மெண்ட் பகுதியில் சிக்கி இருந்தார்.
அதேவேளை இதே போல கடந்த மே மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றும் நடுவானில் குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்துடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.