லண்டனில் இருந்து இந்தியா புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்!
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது.
அப்போது, அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என கண்டறிந்து உள்ளார்.
விமானம் அவசர தரையிறக்கம்
உடனடியாக நடுவானில் சென்ற விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக போயிங் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் பற்றி பொது சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இயக்கக உத்தரவின்படி, அனைத்து போயிங் ரக விமானத்தின் சுவிட்சுகளும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் எந்த பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை என தெரிவித்து உள்ளது.