பறவை மோதியதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரத்து
இந்தியாவின் விஜயவாடாவிலிருந்து பெங்களூருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானம் நேற்று (03) காலை புறப்படுவதற்காக ஓடுபாதையில் தயார் நிலையில் இருந்த போது , கழுகு ஒன்று விமானத்தின் முன் பகுதியில் மோதுண்டது.
இதனால், குறித்த விமான பயணம் இரத்து செய்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி ஏற்பட்டதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை இந்தியாவின் இண்டிகோ விமானம் தொடர்பான இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பு பதிவானது.
செப்டம்பர் 1 ஆம் திகதி நடுவானில் பறவை மோதியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தால், கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.
272 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம், யாருக்கும் காயம் ஏற்படாமல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.