பேர்லினில் உறைபனியால் விமானப் போக்குவரத்து நிறுத்தம்
ஜேர்மன் பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை காலை விமானங்கள் பனியை அகற்ற முடியாததால், மானங்கள் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 10:15 மணி நிலவரப்படி, விமானங்கள் எதுவும் புறப்படவில்லை என்று விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது.

பெர்லினுக்கு எச்சரிக்கை
கிழக்கு ஜெர்மனி முழுவதும் இரவு முழுவதும் புதிய பனி மற்றும் உறைபனி மழை பெய்தது. இதனால் சாலைப் பயணம் மற்றும் ரயில் போக்குவரமும் பாதிக்கப்பட்டது.
ஆபத்தான பனிக்கட்டி உருவாகும் அபாயம் இருப்பதாக ஜெர்மன் வானிலை சேவை (DWD) பெர்லினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உறைபனி மழை நகரம் முழுவதும் கடுமையான வழுக்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர். தேசிய வானிலை சேவை ஆபத்தான பனிக்கட்டி நிலைமைகள் குறித்து எச்சரித்துள்ளதால், இந்த இடையூறு ஜெர்மன் தலைநகரில் விமானப் பயணத்தை பாதித்துள்ளது.
இருப்பினும் ஆரம்பத்தில் தரையிறக்கங்கள் பாதிக்கப்படவில்லை. விமானங்கள் இரத்து செய்யப்படுவதையும் குறிப்பிடத்தக்க தாமதங்களையும் எதிர்பார்க்கலாம் என்று பயணிகளிடம் கூறப்பட்டது.
சமீபத்திய விமான நிலையை அறிய தங்கள் விமான நிறுவனங்களுடன் நேரடியாகச் சரிபார்க்குமாறு விமான நிலையம் பயணிகளை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.