கனடாவில் அல்பர்ட்டா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மாகாணத்தில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மறை 30 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், எதிர்வரும் சனிக்கிழமை மறை 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு இந்த கடும் குளிருடனான வானிலை மாகாணத்தில் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடங்களுக்கு செல்வோர் குளிருக்கு தாக்குபிடிக்கக் கூடிய ஆடைகள் மற்றும் அங்கிகளை அணிந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குளிரினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.