அல்பர்ட்டாவில் விரைவில் இது ரத்தாகும்... முதல்வர் வெளியிட்ட தகவல்!
அல்பர்ட்டாவில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் முறைமை விரைவில் ரத்தாகும் என முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான திகதி நிர்ணயிக்கப்படும் என முதல்வர் ஜேசன் கென்னி சுட்டிக்காட்டியுள்ளார்.
அல்பர்ட்டாவில் அதிக கொரோனா தடுப்பூசி ஏற்றுகை வீதம் மிகவும் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலைகள் மீதான அழுத்தங்களும் வெகுவாக குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வெகு விரைவில் Covid19 Vaccine சான்றிதழ் நடைமுறை ரத்து செய்யப்படும் என அவர் உறுதி வழங்கியுள்ளார்.
அல்பர்ட்டா மாகாணத்தில் எதிர்வரும் மார்ச் மாத இறுதியளவில் கொரோனா சான்றிதழ் நடைமுறை முழுமையாக ரத்து செய்யக்கூடிய சாத்தியங்கள் உண்டு என முதல்வர் கென்னி (Jason Kenney) தெரிவித்துள்ளார்.