அல்பர்ட்டாவில் அவசரகாலநிலை அறிவிப்பு காலாவதியாகின்றது
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை அறிவிப்பு காலாவதியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நள்ளிரவுடன் அவசரகால நிலை குறித்த அறிவிப்பு காலாவதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 6ம் திகதி அல்பர்ட்டாவில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. மாகாணத்தில் ஏற்பட்ட 563 காட்டுத் தீ சம்பவங்களில் 504 இடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் 58 இடங்களில் காட்டுத் தீ அணைக்கப்படாத நிலையில் காணப்படுவதாகவும் இதில் 15 இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கு அடங்காதவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மில்லியன் ஹெக்ரயர் காணி காட்டுத் தீ காரணமாக தீக்கிரையாகியுள்ளது.
காட்டுத் தீ சம்பவங்களில் 305 சம்பவங்கள் மனித நடவடிக்கைகளினால் ஏற்பட்டது எனவும், 72 சம்பவங்கள் இடிமின்னல் தாக்குதல்களினால் ஏற்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.