கனடாவிலிருந்து பிரிந்து செல்ல ஆதரவு அளிக்கக் கூடாது: டேனியல் ஸ்மித்!
கனடாவிலிருந்து பிரிந்து செல்ல ஆதரவு அளிக்கக் கூடாது என மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண ஆளும் கட்சியான யுனைடெட் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்த பொதுக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாக வாரியத்தில் இணைய விரும்பும் அனைவரும், "கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம்" என்ற உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள வாரிய உறுப்பினர்களும் இந்த உறுதிமொழியை மதிக்க வேண்டும் எனபிரதமர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களும் தங்களது ‘கனடா ஆதரவு’ நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று செவ்வாயக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நாங்கள் மாகாண சுதந்திரத்திற்கான கட்சி அல்ல. கட்சியின் கொள்கைகள் குறித்து விவாதிக்க மக்களுக்குப் பல வாய்ப்புகள் உள்ளன, ஆனால் பிரிவினைவாதத்திற்கு இங்கு இடமில்லை" எனத் தெளிவுபடுத்தினார். கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா கனடாவிலேயே தொடர வேண்டும் என மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.
இந்த முடிவை வேட்பாளர்கள் மதிக்க வேண்டும். "ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் வாக்காளர்களின் விருப்பத்தை உண்மையுடன் பிரதிபலிப்பதே ஆகும். மக்கள் கனடாவுடன் இணைந்திருக்கத் தீர்ப்பளித்த பிறகு, ஒரு வேட்பாளராக நம்பகத்தன்மையைப் பெற அவர்களின் முடிவிற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.