கியூபெக்கில் 5 வயது சிறுமி தொடர்பில் விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை ரத்து
கியூபெக்கில் மாயமான 5 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் Val d'Or பகுதியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்தனர்.
சிறுமி தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 6.30 மணியளவில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அம்பர் எச்சரிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, சிறுமியை கடத்தியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனமானது மரங்கள் அடர்ந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், சிறுமியுடன் அந்த நபர் அப்பகுதியில் இரவைக் கழித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுமி கடத்தல் தொடர்பில் கைதான நபர் விசாணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.