அமெரிக்காவின் ரஷ்ய தூதுவராக அலெக்சாண்டர் டார்ச்சீ நியமிப்பு
அமெரிக்காவுடனான நல்லிணக்கத்தை பேணும் நோக்கில், முன்னாள் ராஜதந்திரி அலெக்சாண்டர் டார்ச்சீ (Alexshander Darcheiv) அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் கடந்தவாரம் துருக்கியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
64 வயதான அலெக்சாண்டர் டார்ச்சீவ் 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டுவரை கனடாவுக்கான ரஷ்ய தூதுவராக செயற்பட்டுள்ளார்.
ஏனைய முன்னாள் ரஷ்ய இராஜதந்திரிகளைப் போலவே, அவர் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டிருந்தவராக கருதப்படுகிறார்.