அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
அண்மையில் ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
மேலும், அவரது உயிரிழப்புக்கான காரணம் எதுவும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அலெக்சி நவால்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக நவால்னியின் மனைவி மற்றும் தாயார் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு வரும் மார்ச் 1ம் திகதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறுகையில்,
மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் வரும் மார்ச் 1ம் திகதி அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், பின்னர் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.